நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

0 0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(08.05.2025) விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அர்ச்சுனா, பலமுறை உறுப்பினர்களை இடைமறித்து பேசினார்.

குறிப்பாக கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பான விவாதம் நடைபெற்ற போது அவர் பலமுறை சபையை இடைமறித்தார்.

இதன் காரணமாகவே அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அர்ச்சுனா உரையாற்றுவதை ஒளிபரப்புவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.