தினமும் கோழி இறைச்சி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கோழி இறைச்சியை தினமும் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் உருவாகலாம்.
மேலும், இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், கோழி இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோழி இறைச்சியை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாள் எடுத்து கொள்ளலாம் என்றும் தினமும் கோழி இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானது என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.