இந்திய (India) ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிந்து – பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், அந்நாட்டு இராணுவத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக இந்த தாக்குதல் இருந்ததாகவும் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.