செவ்வாய் கிரகத்தில் கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு

24

 செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த கடல் நீர் பூமியில் உள்ளது போன்று உப்புத்தன்மை கொண்டதா அல்லது தண்ணீர் போன்று சுவையானதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Comments are closed.