இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

0 0

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று புதன்கிழமை புதுடில்லிக்கு சென்று, திரும்பிய சில மணித்தியாலங்களில், சவூதியின் வெளியுறவு இணையமைச்சர் அடெல் அல்-சு{பைர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

காஸ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கும்; பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை அடுத்தே, சவுதி அரேபியாவின் அமைச்சர் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சருடன் இன்று சிறப்பான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது என்று தகவல் மாத்திரமே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சில் இருந்து வெளியாகியுள்ளது.

எனினும் பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வதில் இந்தியாவின் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.