ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ரணில் 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (8) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி 2022ஆம் ஆண்டு 4 சுற்றுப்பயணங்களும் 2023ஆம் ஆண்டு 14 சுற்றுப்பயணங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு 5 சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.