பிரித்தானியாவில் அண்மையில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் சமீபத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து, பிரித்தானியர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக ஐப்சோஸ்(Ipsos) என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
மேலும், அந்த வன்முறைகளுக்கு, பொதுவாக, அரசியல்வாதிகள் யாரும் சரியாக பதிலளிக்கவில்லையென மக்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆய்வில் மக்களிடம் எந்தெந்த விடயங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு, பொது சேவைகள் குறித்து என 84 சதவிகிதம் பேரும், பொருளாதாரம் குறித்துதான் அதிக கவலை என 83 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
அடுத்தபடியாக, வலதுசாரி பயங்கரவாதம் குறித்துதான் தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக, 73 சதவிகிதம் பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இதே கேள்விகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களிடையே கேட்டபோது, பயங்கரவாதம் குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்தவர்களின் எண்ணிக்கையைவிட, தற்போது வலதுசாரி பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.