இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை – சிதறிக் கிடந்த உடற்பாகங்களால் அதிர்ச்சி

0 4

தகாத உறவு காரணமாக 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.

குளிக்கடை – மெதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிஷான் புத்திக என்ற நபரின் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தக் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

புதர் ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் உடலை டயர்கள் வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள், அனுராதபுரத்தின் லோலுகஸ்வெவ பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது, ​​புத்தளம் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டதுடன் உடல் பாகங்கள் அந்த இடம் முழுவதும் சிதறிக்கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.