தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்க மாட்டோம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடையும் எந்தவொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியதன் பின்னர் எதிரிகள் தாக்கப்படுவார்கள் எனவும், எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் சிலர் பிரசாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவ்வாறான எந்தவொரு பழிவாங்கல் செயற்பாடுகளும் இடம்பெறாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மிகவும் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மிகவும் அமைதியான முறையில் நாம் எமது வெற்றியைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
போட்டி ஆரம்பிக்கும் போது கைலாகு செய்தோம் போட்டியின் நிறைவிலும் எமது வெற்றியுடன் கைலாகு செய்வோம் என விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.