2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததன் மூலம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 6.68வீதமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், WTI மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 55.60 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு கட்டத்தில், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் விலை 6.34 வீதமாக குறைந்து 58.84 அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. உலகம் கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட 2021 – பெப்ரவரிக்குப் பிறகு, ஒரு பீப்பாய் 2021 எண்ணெயின் விலை 60 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்தது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்ததிலிருந்து, தொடர்ந்து ஐந்தாவது நாளாக எண்ணெய் விலைகள் கடுமையாக சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா கூடுதல் வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (09) மசகு எண்ணெயின் விலை சுமார் 7 வீதமாக குறைந்துள்ளது.