கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸை பிரித்தானிய மன்னர் சார்லஸ் சந்தித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சுவாச குழாய் பாதிப்பு போன்ற நோய்கள் இருந்துள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மதத்திற்கும் மேலான சிகிச்சையின் பின்னர் வத்திக்கான் ஆலயத்திற்கு திரும்பிய போப் பிரான்சிஸ், அங்கு ஓய்வெடுத்து வருகின்றார்.
இந்நிலையில், இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா தம்பதியினர் போப் பிரான்சிஸை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.