கனடாவில் (canada) மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குரங்கம்மை நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளமை தொடர்பில் அந்நாட்டு சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதம் வரையில் 93 பேர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறும் அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நாட்டு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
Comments are closed.