சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்தாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு(namal rajapaksa) ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அடுத்து ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர(Premalal Jayasekara) மீண்டும் மொட்டுவில் இணைய வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed.