பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கங்களுடன் முதலிடத்தை பெற்ற அமெரிக்கா

12

பாரிஸில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா (America) 40 தங்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

44 வெள்ளி பதக்கங்களையும் வென்ற அமெரிக்கா மொத்தமாக 126 பதக்கங்களை வெற்றிக்கொண்டது.

அத்துடன், சீனா 40 தங்கங்களையும் 27 வெள்ளிகளையும் பெற்று மொத்தமாக 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

ஜப்பான் 20 தங்கம் 19 வெள்ளி பதங்கங்களுடன் மொத்தமாக 45 பதங்கங்களை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா 18 தங்கம், 19 வெள்ளி உட்பட்ட 53 பதங்கங்களுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

போட்டிகளை நடத்திய பிரான்ஸ் 16 தங்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்களை வென்று ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், நெதர்லாந்து 15 தங்கங்களுடன் ஆறாவது இடத்தையும் பிரித்தானியா 14 தங்கங்களுடன் ஏழாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

Comments are closed.