பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்

13

வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வெளியேறும் நிகழ்வில் படையினர் நடத்திய பராசூட் சாகசத்தின் போது இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (03) இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், ஒரு பராசூட் தரையிறங்கும் பகுதிக்கு அப்பால் சென்று மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்ததுடன் மற்றுமொரு பராசூட் வேகமாக தரையில் விழுந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இரண்டு பராசூட் வீரர்களும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.