ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

7

ருமேனியாவில் (Romania) இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை (Sri Lanka) திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில வேலை முகவர் நிலையங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவில், 40,000 இலங்கையர்கள் உள்ள நிலையில் இது இலங்கைக்கு ஒரு பெரிய சந்தை அத்தோடு ருமேனிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ருமேனியாவில் மேலும் வாய்ப்புகளை மேம்படுத்துவதை எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, 3500 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் செலுத்திய போதிலும் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை வழங்கப்படாமல் சில தொழிலாளர்கள் வேலை முகவர்களால் தவறாக வழிநடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

விசிட் விசாவில் வேலை தேடிச் செல்ல வேண்டாம் என்று இலங்கையர்களுக்கு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறோம் அத்தோடு வீட்டுப் பணியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சில இலங்கையர்கள் மோசமான வாழ்க்கை நிலைமைகள் கொண்ட உணவகங்களில் சமையலறை உதவியாளர்களாக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.