மூன்றாம் உலகப்போர் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

15

நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறாவிட்டால் மூன்றாம் உலகப் போர் உருவாகக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donal Trump) எச்சரித்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள ட்ரம்ப்பின் விடுதியில் இடம்பெற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விடுதிக்கு நேற்று (26.07.2024) நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விஜயம் செய்த போது ட்ரம்ப், அவர்களை விடுதியின் வாசல் வரை சென்று வரவேற்றார்.

இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ட்ரம்ப் மூன்றாம் உலகப்போர் தொடர்பாக நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறும் பட்சத்தில் உலகின் அதிகாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் எப்போதும் இல்லாத அளவுக்கு மூன்றாம் உலகப்போர் தொடர்பான கருத்து தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் அமெரிக்காவை ஆளும் திறமையற்ற ஆட்சியாளர்கள் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ட்ரம்ப்பின் அறிவுறுத்தலுக்கமைய ஹமாஸுடன் (Hamas) போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வர நெதன்யாகு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.