நாட்டின் காலாவதியாகியுள்ள பெருந்தோட்டத் துறையை நவீன மற்றும் செழிப்பான விவசாய வணிகமாக மாற்றுவதற்கான வரைபடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வெளியிட்டுள்ளார்.
இந்த மூலோபாயத்தின் முக்கிய தூண்களில், காலனித்துவ காலத்தின் ‘லைன்-ரூம்’ வரிசை வீடுகள் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தோட்ட நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சாத்தியமான வருவாய் பகிர்வு மாதிரி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
“எங்களுக்கு தோட்டங்கள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு செழிப்பான விவசாய வணிகம், நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் ஒரு பெரிய நிர்வாக நிறுவனம் தேவை, அதில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும். இதற்காக நாங்கள் உள்ளே இருந்து சீர்திருத்தங்களைத் ஆரம்பிக்கப்போகிறோம்” என்று ஜனாதிபதி விக்ரமசிங்க நேற்று (26.07.2024) கொழும்பில் சர்வதேச தேயிலை மாநாடில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
இதன்படி, எல்லா லைன் அறைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அரசாங்கத்துக்கு பொறுப்பெடுத்து, அவற்றை கிராமங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ‘லைன்-ரூம்’ கலாசாரம், நுவரெலியாவில் உள்ள பல பரிமாண வறுமைக் குறிகாட்டிகளின் உயர் வீதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட இது அதிகமாக உள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.