வவுனியாவில் 3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்!

0 4

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (07) 3000 நாளை எட்டியுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சங்கத்தினரால் இன்றையதினம் (7)  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதிப் போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் மூவாயிரம் நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.