டெல்லி விமான சேவையில் பாதிப்பு.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0 3

இந்திய (India) – பாகிஸ்தான் (Pakistan) போர் பதற்றம் காரணமாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து சீராக நடப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிஉயர் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு விமான நிலைய நிர்வாக சேவை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம், “வளர்ந்து வரும் வான்வெளி இயக்கவியல் மற்றும் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தால் கட்டளையிடப்பட்ட அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகளின் வெளிச்சத்தில், விமான அட்டவணைகளில் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் நீண்ட காத்திருப்பு நேரங்கள் இருக்கலாம்” என்று கூறியுள்ளது.

எனவே, பயணிகள் முன்கூட்டிய திட்டமிடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தாமதங்களைச் சமாளிக்க பயணிகள் முன்கூட்டியே வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.