வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

0 3

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 2,258,480 வாக்குகளை பெற்று 1767 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 954,517 வாக்குகளை பெற்று 742 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, 488,406 வாக்குகளை பெற்று 381 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 307,657 வாக்குகளை பெற்று 377 ஆசனங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி, 5,740,179 மற்றும் 6,863,186 வாக்குகளை பெற்றிருந்தது.

எனினும், நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற தவறியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி பெற்றுக்கொண்ட வாக்கு எண்ணிக்கையை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள் 12 இலட்சம் குறைவு ஆகும்.

மேலும், நாடளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட ஏறத்தாழ 24 இலட்சம் குறைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.