பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

0 9

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது இராணுவ நடவடிக்கைகளின்போது, பாகிஸ்தான் இராணுவத்தை குறிவைக்கவில்லை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய ரஃபேல் போர் விமானங்கள், பஹாவல்பூரில் உள்ள அகமதுபூர் கிழக்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகமதுபூர் கிழக்கு அருகே ஒரு ரஃபேல் ஜெட் விமானத்தையும் மற்றொரு இந்திய போர் விமானத்தையும் பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்துக்குள் தாம் எதிரியின் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக குறி;ப்பிட்டுள்ள பாகிஸதானிய ஊடகங்கள், தமது படையினரின் கைகள் சுத்தமானவை என்றும் குறிப்பிட்டுள்ளன.

ரஃபேல் விமானம் என்பது மிகவும் மேம்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான இரட்டை இயந்திர போர் விமானமாகும், இந்த விமானம், வான் மேன்மை, தரை ஆதரவு, ஆழமான தாக்குதல் மற்றும் அணுசக்தி தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.

Leave A Reply

Your email address will not be published.