கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

0 2

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடிவருவதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிரிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் கோவிலுக்கு சேதம் ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.