மோடியின் இலங்கை வருகைக்கு முன் ரணிலை சந்தித்த இந்திய ஊடகங்கள்

0 6

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ,வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், மேலும் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இப்போது நாம் உண்மையில் ஒப்புக்கொண்டு செயல்படுத்த கூடிய பிற திட்டங்கள் பற்றிப் பேசி வருகிறோம் எனவும் ரணில் விளக்கியுள்ளார்.

இந்த திட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும், பிரதமர் மோடி இங்கு இருக்கும்போது அவை உறுதிப்படுத்தப்படும் என்று ரணில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவு குறித்து விவாதித்த விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு முக்கியம் என்பதை இதன்போது ஒப்புக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த ரணில்

“நிதி நெருக்கடியின் போது எங்களுக்கு வழங்கப்பட்ட உதவியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அது இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும்

வர்த்தக உறவுகள் குறித்து, இந்த ஆண்டுக்குள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (ECTA) முடிப்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டில் நிறைவடைய வேண்டும் என்பதே எனது யோசனையாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை தமது நாடு நம்பியிருந்தது.

ஆனால் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் இப்போது எவ்வாறு இருக்கின்றன?

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகளாக எரிசக்தி வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பால் தொழில் ஆகியவை முக்கியமான விடயங்களாகும்.

கூடுதலாக, வலுவான விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதில் கவனம் செலுத்தி, உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம்.

சில கூறுகளை உற்பத்தி செய்வதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.

மேலும் இந்த முயற்சி முன்னேறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தும் பகுதியாக இருந்து வருகிறது.

இப்போது நாங்கள் பால் உற்பத்தி துறைக்கு எங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளோம்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.