நாடுகடத்தும் இறுதி உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, குறைந்தபட்சமாக 5,000 டொலர்கள் அபராதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சுமார் 4,500 புலம்பெயர்ந்தோருக்கு, மொத்தம் 500 மில்லியன் டொலர்களை 30 நாட்களுக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கான நிதி ஆதரவும், வாழ்வாதாரமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து செலுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாற்றுவழி இல்லாமல், கட்டாயமாகவே நாட்டை விட்டு வெளியேற வைக்கும் நோக்கத்துடன், இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.