காசா போர் தொடர்பில் குரல் கொடுத்த கிரிக்கெட் பிரபலம்

0 0

காசா போர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக அவர் இவ்வாறு குரல் கொடுத்துள்ளார்.

காசாவில் இடம்பெற்று வரும் தீவிர போரை நிறுத்துமாறு யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறே கோரியுள்ளார்.

உஸ்மான் காவாஜா தனது சமூக ஊடகப் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் நம்பகமானதும் மதிப்பிற்குரிதுமான சிறுவர் நல தொண்டு நிறுவனங்களில் ஒன்றான யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு வார காலத்தில் 45 சிறுவர்கள் உள்ளிட்ட 450 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படாத ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தனது பேச்சை கேட்காவிட்டாலும், யுனிசெப்பின் கோரிக்கையை ஏற்குமாறு தொடர்புடைய தரப்பிடம் உஸ்மான் கவாஜா கோரியுள்ளார்.

உலகின் அனைத்து உயிர்களும் சமமானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.