ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தம்மிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
அனைத்துப் பொறுப்புக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணசபை, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கணிசமான வாக்கு பின்னணியைக் கொண்ட தமக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேயர் யார் என்பது பற்றியோ அடுத்த கட்ட நகர்வு பற்றியோ தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு வழங்கப்படாத பொறுப்புக்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தாம் இந்தக் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.