பணம் கொடுத்து அரிசி வாங்காத ஜப்பானிய அமைச்சர் பதவி விலகினார்

0 3

ஜப்பானின் விவசாய அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜப்பானில் தற்போது, முக்கிய தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அத்துடன் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தாம் ஒருபோதும் அரிசியை கொள்வனவு செய்ததில்லை என்ற அவரின் கூற்றே, இந்த பதவி விலகலுக்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கட்சி கருத்தரங்கில் கருத்து தெரிவித்த டகு எட்டோ, தனது ஆதரவாளர்கள் எப்போதும் தனக்கு அரிசியை பரிசாக வழங்கி வருகின்றனர், எனவே தாம் அரிசியை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து உடனடியாகவே, பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நுகர்வோர் உயர்ந்து வரும் அரிசி விலையால், சிரமப்படும் நேரத்தில் தாம் பொருத்தமற்ற கருத்து ஒன்றை தெரிவித்தமையை, அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன், பிரதமர் அலுவலகத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று ஒப்படைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.