ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! அமெரிக்காவின் எச்சரிக்கையால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

0 4

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டாகப் போர் நடந்து வரும் போர் காரணமாக, இந்த நிலை உருவாகியுள்ளது.

காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஈரான் மீதான தாக்குதல் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக உயர்ந்த நிலை தற்போது காணப்படுகிறது.

இஸ்ரேலின் தலைமை அத்தகைய தாக்குதலை நடத்த இறுதி முடிவை எடுத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.