பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

0 5

பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினத்தின் புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடற்கரையில் மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில்,

“கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் என்ற தம்பதியினர் பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

புகைப்படங்களின் படி எலும்புக்கூடானது மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் போல காட்சியளித்துள்ளது.

இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளித்துள்ளது.

இது தொடர்பில் எதுவும் கூற முடியாது. அது மிகவும் விசித்திரமான விடயம்,” என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரையில் எதுவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.