பொறுமைக்கும் எல்லை உண்டு! இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை

0 7

இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு மத்தியில் ஹிஸ்புல்லாவின் பொறுமைக்கும் வரம்புகள் இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசெம், தமது அமைப்பு பலவீனமானது அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் இஸ்ரேலிய மீறல்கள் மற்றும் தெற்கு லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பதை இராஜதந்திரம் மூலம் நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை அரசுக்கு வழங்கு தாம் முயற்சிப்பதாக நைம் காசெம் கூறியுள்ளார்.

லெபனானைில் ஹிஸ்புல்லா அமைப்பை மீறி, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் இஸ்ரேலின் சமன்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நைம் காசெம் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் வரம்புகள் உள்ளன என்றும், நாங்கள் சொல்வதை குறைவாக மதிப்பிட வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த கட்டத்தில் நாங்கள் ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளோம். ஆனால் இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்றால், லெபனான் அரசு அரசியல் மட்டத்தில் தேவையானதைச் செய்ய முடியாவிட்டால், வேறு வழிகளுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் காசெம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.