உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அச்சகத்திற்கு இப்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகள் மற்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த நாளில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 6 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.