டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஆவணம்! முற்றிலுமாக நிறுத்தபட்ட இலங்கைக்கான உதவி திட்டம்
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் அமெரிக்க காங்கிரஸுக்கு வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, USAID மூலம் இலங்கைக்கு, அமெரிக்கா வழங்கும் உதவி திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில் இலங்கை 53 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்று வந்தது, இவை அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களை பகுப்பாய்வு செய்த உலகளாவிய மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இது, இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் சுமார் 0.07% ஆகும். உலகளாவிய அளவில், சிவில் சமூகம் அல்லது தனியார் துறை போட்டித்தன்மை போன்ற சில நிதித் துறைகள் டிரம்ப் நிர்வாகத்தால் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன.
எனினும் அபிவிருத்திக்கான பெரிய பொருளாதாரம், பாதுகாப்பு, உதவி மற்றும் “எச்.ஐ.வி/எய்ட்ஸ்” உள்ளிட்ட பிற துறைகள் ஒப்பீட்டளவில் காப்பாற்றப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், முற்றிலும் நிறுத்தப்பட்ட திட்டங்களுக்காகவே, இலங்கை பெரும்பாலும் நிதியைப் பெற்று வந்தது.
இலங்கையில், சிவில் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சியால் நடத்தப்பட்ட 53 அமைப்புகளின் கணக்கெடுப்பின்படி, 565,000க்கும் மேற்பட்ட நேரடி பயனாளிகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் USAID ஆல் நிதியளிக்கப்பட்டுள்ளனர்.