கனடாவை தொடர்ந்து வம்புக்கிழுக்கும் அமெரிக்கா: அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்

0 1

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை வம்புக்கு இழுத்துவருகிறார்.

அவருடன், உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்கும் தன் பங்குக்கு கனடாவையும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும் கேலி செய்துவருகிறார்.

ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கூறியதுடன், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என கேலி செய்திருந்தார்.

பின்னர், கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கப்போவதாக மிரட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கனடாவும் அமெரிக்காவும் இனைந்து ஒரே அமெரிக்காவாக ஆகியுள்ளதுபோல் காட்டும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ட்ரம்ப்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது ஒருபோதும் நடக்காது என்று கூறியிருந்தார் ட்ரூடோ. கனடா அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

இந்நிலையில், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில், மீண்டும் ட்ரூடோவை கேலி செய்துள்ள எலான் மஸ்க், ’ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை என்று கூறியுள்ளார்.

ஆகமொத்தத்தில், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்துவருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.