விஜய் தொலைக்காட்சியில் விரைவில் நிறைய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது.
சிந்து பைரவி, அய்யனார் துணை என புத்தம் புதிய சீரியல்கள் களமிறங்க உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்தே சிந்து பைரவி தொடரின் புரொமோ ஒளிபரப்பாகி வருகிறது.
நியூ இயர் ஸ்பெஷலாக அய்யனார் துணை தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது.
தற்போது இன்னும் தொடங்கப்படாத புதிய தொடரான சிந்து பைரவி தொடரில் இருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதில் நடிகை ஆர்த்தி சுபாஷ் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.