பிக் பாஸ் 8ம் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் கடந்த சில வாரமாக டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் இந்த வாரம் இரண்டாவது எலிமினேஷனாக மஞ்சரி வெளியேற்றப்பட்டார். விஜய் சேதுபதி தான் கார்டை காட்டி அதை அறிவித்தார். மஞ்சரி எலிமினேட் ஆனதற்கு கதறி கதறி அழுத ஒரே ஒரு போட்டியாளர் ஜாக்குலின் தான்.
ஷோ இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஆனால் அது வரை எப்படி இருப்பேன் என மஞ்சரியிடம் சொல்லி கண்ணீர் விட்டார் ஜாக்குலின்.
மஞ்சரி வெளியேறும்போது ஒரு கோரிக்கை வைத்தார் பிக் பாஸிடம். மற்ற போட்டியாளர்கள் வெளியில் செல்லும்போது கோப்பையை உடைத்துவிட்டு செல்வார்கள். தான் அதை உடைக்கவில்லை, வீட்டிற்கு எடுத்து சென்று அம்மாவிடம் காட்ட விரும்புகிறேன் என கண்ணீருடன் கேட்டார் மஞ்சரி.
ஆனால் அதை பிக் பாஸ் மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அதை உடைத்துவிட்டு கிளம்பினார் மஞ்சரி.