சீனாவில் வேகமாக பரவும் HMPV, இந்தியாவில் முதன்முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
அதாவது, மனித மெட்டாப்நியூமோவைரஸ் என அழைக்கப்படும் எச்.எம்.பி.வி (HMPV) வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனாவில் வடக்கு மகாணங்களில் இந்த HMPV வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் அரசு இருந்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாத குழந்தைக்கு (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், குழந்தையை வேறு எந்த இடத்திற்கும் அழைத்து செல்லாத போதிலும் வைரஸ் தொற்று எப்படி வந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, குழந்தை கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது
இதையடுத்து, 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள தயாராக உள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.