நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், வியாழனன்று, பிரான்சிலுள்ள Stade de France என்னும் விளையாட்டு மைதானத்தில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அணிகள் மோத இருக்கின்றன.
அதனால், அங்கும் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஆகவே, ஆயிரக்கணக்கான பொலிசார் விளையாட்டு நடைபெறும் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.
இதற்கிடையில், மோதல் வெடிக்கக்கூடும் என்னும் அபாயம் நிலவும், பிரான்ஸ் இஸ்ரேல் அணிகள் விளையாடும் போட்டியைக் காண பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் செல்ல இருக்கிறார்.
அது குறித்து எலிசி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எப்போதும்போல, பிரான்ஸ் அணிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி அந்த போட்டியைக் காணச் செல்ல இருக்கிறார்.
அத்துடன், ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்த யூத வெறுப்பு சம்பவங்களுக்குப்பின், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைக் காட்டுவதற்காகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.