அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெற்றியானது, கனேடிய (Canada) வட்டி வீதம் மற்றும் டொலரின் மதிப்பிலும் தாக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.
ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளினால் அந்த நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவில் (US) பணவீக்கத்தை உருவாக்கலாம் என்றும் அதன் தாக்கம் கனேடிய வட்டி விகிதத்தில் மற்றும் கனேடிய டொலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட காரணமாகலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், குறைந்த வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறையை எளிமைப்படுத்துவதாகவும் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயமானது, அமெரிக்க பொருளாதாரத்தில் 3 வீதம் வரை பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்காவின் பணவீக்க அதிகரிப்பானது, கனேடிய வங்கிக்கு கவலையளிக்கும் விடயமாக கருதப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் வட்டி வீத கொள்கையை கருத்தில் கொண்டு கனடா அதன் வட்டி விகிதத்தைக் குறைக்க நேரிடலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதன்போது, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் கனேடிய டொலரின் மதிப்பு குறைவதால், கனடாவுக்கு தேவையான இறக்குமதி பொருட்கள் விலை அதிரிக்கும்.
இவ்வாறான சூழ்நிலையில், கனேடிய வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படும் என்றும், கனேடிய டொலரின் மதிப்பு அமெரிக்காவின் பணமதிப்பிலிருந்து பெரும் வித்தியாசத்தில் குறையலாம் என கூறப்படுகிறது.
Comments are closed.