எதிர்வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை உள்ளதோடு, ஐக்கியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த அழைப்பு விடுக்கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மௌன காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேநேரம் புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளது.
Comments are closed.