மனம் உருக்கிய இளவரசர் வில்லியம்! இளவரசி கேட் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி

13

வேல்ஸ் இளவரசி கேட் நினைவு தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேல்ஸ் இளவரசி கேட் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கியமான நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில், சனிக்கிழமை ராயல் ஆல்பர்ட் ஹாலில்(Royal Albert Hall) நடைபெறும் நினைவு தின நிகழ்ச்சியிலும், ஞாயிற்றுக்கிழமை Cenotaph நடைபெறும் நினைவு தின சேவையிலும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் இளவரசி கேட் தன்னுடைய புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய கணவர் இளவரசர் வில்லியமுடன் சவுத்போர்ட்டில் நடைபெற்ற அரச முறை பயணத்தில் கலந்து கொண்டார்.

இளவரசி கேட் தொடர்பான இந்த செய்தி, இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி மற்றும் தந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பை குறிப்பிட்டு கடந்த ஆண்டு தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் “கடினமான” மற்றும் “கொடூரமான” ஆண்டு என்று விவரித்த பிறகு வெளிவந்துள்ளது.

அதே நேரம் இந்த நிகழ்வுகளுக்கு பிரித்தானிய ராணி கமிலா கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெஞ்சு புண் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 77 வயதான பிரித்தானிய மன்னர் சார்லஸ் இந்த வார தொடக்கத்திலேயே நிகழ்ச்சிகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.