வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் – தேர்தல் தலைவர்

9

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதால், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டமே உங்களுக்கு வழங்கியுள்ள உரிமை. எனவே, அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்கு உங்கள் உரிமை. வாக்கு உங்கள் பலம்… எனவே, காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை உங்களின் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள். நவம்பர் 14 ஆம் திகதி,” ரத்நாயக்க கூறினார்.

Comments are closed.