கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்களுக்கு குடும்ப நல மருத்துவர்களின் சேவை கிடைக்க பெறுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ குடும்ப நல மருத்துவர்கள் கல்லூரி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தகவல் திரட்டல்களை விடவும் தற்பொழுது இந்த எண்ணிக்கை 160000த்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரியின் புதிய தலைவர் டாக்டர் ஜோவின் வருகீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள குறைவு மக்களை பெரிதாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில வேளைகளில் தடுக்கப்படக்கூடிய புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்காணிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments are closed.