நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தற்போது தான் அவர் முழுமையாக குணமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்று நவீன மருத்துவ சிகிச்சை பெற்றார் என்றும் இதற்காக லட்சக்கணக்கில் செலவானதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வராகி சித்தர் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது சமந்தாவுக்கு தோல் நோய் எதுவும் இல்லை என்றும் அவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள் என்றும் இது மாந்திரீகம் சம்பந்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னை சமந்தா சந்தித்தபோது இதை தான் சொன்னதாகவும், பழனி கோவிலுக்கு சென்றால் இது சரியாகிவிடும் என்று நான் அறிவுறுத்தியதாகவும், அதனை அடுத்து சமீபத்தில் அவர் பழனி கோவிலுக்கு சென்றதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பழனி கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணம் கொண்டது என்பதால் அந்த சிலையின் தீர்த்தம் மற்றும் விபூதியை பயன்படுத்தினால் அனைத்து விதமான தோல் நோயும் குணமாகிவிடும் என்றும் நான் சொன்ன அறிவுரையை கேட்டு தான் அவர் பழனி கோவிலுக்கு சென்று இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பழனி கோவிலுக்கு மட்டுமின்றி மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் திருவொற்றியூர் பாகம்பிரியாள் என்ற கோவிலுக்கு செல்லலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளதாகவும், விரைவில் இந்த கோயிலுக்கு சமந்தா செல்வார் என்றும் வராகி சித்தர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் மருத்துவ வசதி அதிகரித்துள்ள இந்த நேரத்தில் கூட இன்னும் மாந்திரீகம் சூனியம் என்று வராகி சித்தர் சொன்னதை பலர் நம்பவில்லை என்றாலும் சிலர் இதனை நம்பி சமூக வலைதளங்களில் ஆச்சரியமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Comments are closed.