கனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய மாதங்களில் வாடகைத் தொகை அதிகரிப்பு வீதத்தில் பின்னடைவு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வருடாந்த அடிப்படையில் ஒப்பீடு செய்யும் போது வீட்டு மனை உரிமையாளர்கள் ஆரம்பத்தில் கோரும் வீட்டு வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Urbanation and rentals.ca ஆகியனவற்றின் வாடகை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சராசரி வீட்டு வாடகை ஜூன் மாதம் 0.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் மாதாந்த அடிப்படையில் வாடகைத் தொகை அதிகளவில் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பமாக கடந்த ஜூன்மாத சராசரி வாடகைத் தொகை அமைந்துள்ளது.
எவ்வாறெனினும் வருடாந்த அடிப்படையில் பார்க்கும் போது கடந்த ஜூன் மாத சராசரி வாடகை 7 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் சராசரி வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவான போதிலும் சில நகரங்களில் தொடர்ச்சியாக வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed.