சிறை செல்லவிருக்கும் டொனால்டு ட்ரம்ப்… வாழும் நாஸ்ட்ராட்ராமஸ் விடுத்த எச்சரிக்கை

13

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், அவருக்கு ஒரே ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான 77 வயது டொனால்டு ட்ரம்ப் நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை விவரம் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2006ல் நடந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்காக ஆபச பட நடிகையான Stormy Danielsக்கு 2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ட்ரம்ப் தரப்பில் சுமார் 97,000 பவுண்டுகள் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது தேர்தல் பரப்புரைக்கு என திரட்டப்பட்டது, அதில் இருந்து போலியான வணிக பதிவுகளை உருவாக்கி, அந்த தொகையை தமது முன்னாள் சட்டத்தரணி Michael Cohen மூலமாக நடிகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பூதாகரமாக வெடிக்கவே, மன்ஹாட்டன் நீதிமன்றம் அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளில் ட்ரம்ப் குற்றவாளி என உறுதி செய்துள்ளது. இதனையடுத்து 4 ஆண்டுகள் வரையான சிறை தண்டனையை ட்ரம்ப் எதிர்நோக்கியுள்ளார்.

இந்த நிலையில், வாழும் நாஸ்ட்ராட்ராமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé ட்ரம்பின் உடல் நலம் தொடர்பில் எச்சரித்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுக்க நுரையீரல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும் என்று ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மேல்முறையீடு வாய்ப்புகள் இருப்பதால், அதில் வெற்றிபெற்று சிறை தண்டனையில் இருந்து அவர் தப்பலாம் என்றும் அரசியலில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், 2026 டொனால்டு ட்ரம்புக்கு முக்கியமான ஆண்டு என்றும் Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.