புடினுடைய வாரிசு இவர்தான்… யார் இந்த ரஷ்ய ஹீரோ?

14

ரஷ்ய ஹீரோ என்னும் உயரிய விருது பெற்ற ஒருவருக்கு புடின் புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள விடயம் உலகின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது முன்னாள் பாதுகாவலர் ஒருவருக்கு புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ளார். அவரது பெயர் அலெக்ஸி ட்யுமின் (Alexei Dyumin, 51). புடின், ட்யுமினுக்கு, புதன்கிழமையன்று, மாகாண ஆலோசனைக் கவுன்சில் செயலர் (secretary of the advisory State Council) என்னும் உயரிய பதவியை வழங்கியுள்ளார்.

அலெக்ஸி ட்யுமின், புடினுடைய பாதுகாவலராக இருந்தவர் ஆவார். மார்ச் மாதம் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, மே மாதம் அவர் ட்யுமினை மாஸ்கோவுக்கு வரவழைத்து தனக்கு அருகே வைத்துக்கொண்டார்.

2016ஆம் ஆண்டு, ட்யுமின் புடினுடைய பாதுகாவலர்களில் ஒருவராக இருக்கும்போது, புடின் தனது ஓய்வு இல்லத்தில் மல்யுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய வீட்டுக்கு அருகே வந்த ஒரு கரடியை ட்யுமின் துப்பாக்கியைக் காட்டி துரத்திய விடயம் தலைப்புச் செய்தியானது.

ரஷ்யாவின் உயரிய விருதான, ரஷ்ய ஹீரோ (Hero of Russia state award) என்னும் விருதைப் பெற்ற ட்யுமின், ஜனாதிபதி எங்கு சென்றாலும், அது ரஷ்யாவானாலும், வெளிநாடானாலும், அவரை பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளில் நானும் ஒருவன் என்று கூறியிருந்தார்.

குறித்துத்தான் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள புடின் ஆதரவாளரும், கிரெம்ளின் ஆலோசகருமான Sergei Markov என்பவர், நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட இந்த விடயம், புடின் விருப்பத்தின்படி, ட்யுமின் ரஷ்யாவின் எதிர்கால ஜனாதிபதியாவார் என்பதை உறுதி செய்யும் விடயமாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.