இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) இக்கட்டான பட்டியலில் நுழைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அவர், இலங்கைக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு இக்கட்டான பட்டியலில் நுழைந்த மூன்றாவது இந்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1993இல் மொஹமட் அசாருதீன் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த அணித்தலைவராக கருதப்பட்டார்.
1997இல் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இரண்டாவது அணித்தலைவராக பதிவிடப்பட்டார்.
இந்தநிலையில் 2024இல் ரோகித் சர்மா, இந்த சங்கடப்பட்டியலில் மூன்றாவது இந்தியராக நுழைந்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது அவர் இரண்டு அரை சதங்களையும் போட்டிகளின்போது பெற்றுக்கொடுத்தார்.
Comments are closed.