ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர்.
அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்!
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தாயாகிய Maye Musk, ஒரு காலத்தில் தாங்கள் ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் குடும்பமாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் தன் மகனான எலான் மஸ்கை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்லும்போது, பெரும்பாலும் தரையில் ஒரு மெத்தையையோ அல்லது கம்பளியையோ விரித்தோ அல்லது, கேரேஜில் போடப்பட்டுள்ள ஒரு மெத்தையிலோ கூட படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவிக்கிறார்.
அதாவது, டெக்சாசிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தளத்திற்கு மகனைக் காணச் சென்றதாகவும், அங்கு விருந்தினர்களைத் தங்கவைக்க இடவசதி இல்லையென்றும், அதனால், தான், கேரேஜில் போடப்பட்டிருந்த ஒரு மெத்தையில் படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார் Maye Musk.
Comments are closed.