40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்

12

சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

நடைபெற்றுவரும் பரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று (08) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் தடகள வீரர் அர்ஷத் நதீம் குறித்த தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

நதீமின் முதல் எறிதலானது எல்லைக்க அப்பால் சென்றதால், அது தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அவர் தனது இரண்டாவது எறிதல் 92.97 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வெல்ல வழி வகுத்தது.

இந்த போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சொப்ரா 2ஆவது இடத்தையும், Grenada நாட்டு வீரரான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Comments are closed.